பெயர்ச்சொல்
- 1
பூக்களில் சுரக்கும், (வண்ணத்துப் பூச்சி, தேனீ போன்றவற்றுக்கு உணவாகும்) இனிப்புச் சுவையுடைய திரவம்.
‘பூக்கள்தோறும் சென்று வண்ணத்துப்பூச்சி தேன் குடித்தது’ - 2
மேற்குறிப்பிட்ட திரவத்தைத் தேனீக்கள் உண்டு வெளிவரச் செய்வதன் மூலம் தயாரிக்கும் குழகுழப்புத் தன்மையும் இனிப்புச் சுவையும் மருத்துவக் குணமும் கொண்ட திரவம்.
‘பாலில் தேன் கலந்து நான் சாப்பிட்டேன்’
பெயர்ச்சொல்
- 1
தேனைச் சேகரிப்பதும் கூட்டமாக வாழ்வதும் கொட்டக்கூடியதுமான ஒரு வகைப் பூச்சி.
‘தேனீபோல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பார்கள்’