தமிழ் தேம்பு யின் அர்த்தம்

தேம்பு

வினைச்சொல்தேம்ப, தேம்பி

  • 1

    (அழும்போது) மூச்சு தடைபட்டு ஒலியுடன் வெளிப்படுதல்.

    ‘மகளின் மறைவைத் தாங்க முடியாத பெரியவர் சிறு குழந்தையைப் போலத் தேம்பினார்’
    ‘பொம்மை தொலைந்துபோனதற்காகவா உன் மகள் இப்படித் தேம்பித்தேம்பி அழுகிறாள்?’