தமிழ் தேர் யின் அர்த்தம்

தேர்

வினைச்சொல்தேர்ந்து

 • 1

  (ஒரு துறையில்) நுணுக்கமான அறிவும் திறமையும் பெற்றிருத்தல்.

  ‘அவர் சிற்பக் கலையில் தேர்ந்தவர்’

 • 2

  உயர் வழக்கு தேர்ந்தெடுத்தல்.

  ‘முதலில் கல்லூரி அமைப்பதற்கான இடத்தைத் தேர்ந்துவிடுவது நல்லது’

தமிழ் தேர் யின் அர்த்தம்

தேர்

பெயர்ச்சொல்

 • 1

  உற்சவமூர்த்தியை வைத்து நீண்ட வடக்கயிற்றைக் கொண்டு இழுத்துச் செல்லப்படும், கோபுரம் போன்ற அமைப்பையும் மிகப் பெரிய சக்கரங்களையும் கொண்ட கோயில் வாகனம்.

  ‘தேர்த் திருவிழாவை முன்னிட்டு கோயிலைச் சுற்றிக் கடைகள் போடப்பட்டிருந்தன’
  ‘தேர் நிலைக்கு வந்து சேர மதியம் ஆகிவிடும்’

 • 2

  (அரசர் முதலியோர் பயணம் செய்வதற்கும் போருக்கும் பயன்படுத்திய) குதிரைகளால் இழுக்கப்படும் வாகனம்; ரதம்.

  ‘தேரின் உச்சியில் சோழர்களின் புலிக் கொடி பறந்தது’