தமிழ் தேர்ந்தெடு யின் அர்த்தம்

தேர்ந்தெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

 • 1

  (ஒரு பயன் அல்லது தகுதி அடிப்படையில்) தரம் பிரித்து எடுத்துக்கொள்ளுதல்; (பலவற்றுள் ஒன்றை) வேண்டியது எனத் தீர்மானித்தல்.

  ‘இன்று இந்த ஊரில் ராணுவத்துக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்’
  ‘இவர் சங்கப் பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்’
  ‘நான் இளங்கலையில் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்’

 • 2

  (ஓர் அரசுக்கு அல்லது அமைப்புக்குப் பிரதிநிதிகளை அல்லது பதவிக்கு உரியவரை) வாக்களித்துத் தகுதி அடையச் செய்தல்.

  ‘குடியரசில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்’