தமிழ் தேறு யின் அர்த்தம்

தேறு

வினைச்சொல்தேற, தேறி

 • 1

  (தேர்வு, பரிசீலனை ஆகியவற்றில்) தகுதி உடையவராக அல்லது தகுதி உடையதாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்; தேர்ச்சி பெறுதல்.

  ‘இந்த நேர்முகத் தேர்வில் ஒரு சிலரே தேறியுள்ளார்கள்’
  ‘நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இதில் ஒன்றுகூடத் தேறாது’

 • 2

  (உடல்) நலம் பெறுதல்/(நிலையில்) முன்னேற்றம் அடைதல்; சீரடைதல்.

  ‘அவனுக்கு உடம்பு தேறி எடை கூடியிருந்தது’
  ‘ஒடிந்த கை தேற மூன்று மாதமாகிவிட்டது’
  ‘சென்னைக்கு வந்தபின் உன் மகன் ரொம்பத் தேறிவிட்டான்’

 • 3

  தோராயமான மதிப்பை, அளவைக் கொண்டிருத்தல்.

  ‘நகைகள் பத்துப் பவுன் தேறும்’
  ‘உன்னிடம் நூறு ரூபாயாவது தேறுமா?’
  ‘இந்த வீடு எவ்வளவு தேறும்?’
  ‘நம் தோட்டத்தில் எவ்வளவு மாம்பழம் தேறும்?’
  ‘பையிலிருந்த சில்லரையை எண்ணிப் பார்த்ததில் ஐம்பது ரூபாய்கூடத் தேறவில்லை’