தமிழ் தேவி யின் அர்த்தம்

தேவி

பெயர்ச்சொல்

 • 1

  பெண் தெய்வம்.

  ‘தேவி வழிபாடு’

 • 2

  பெண் தெய்வப் பெயரின் முன்னோ பின்னோ இடப்படும் அடைமொழி.

  ‘தேவி ஜக்கம்மா’
  ‘காளி தேவி’

 • 3

  உயர் வழக்கு (அரசரின்) மனைவி.

  ‘அரசரும் தேவியும் கொலுமண்டபத்தில் வீற்றிருந்தனர்’