தமிழ் தேவை யின் அர்த்தம்

தேவை

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  இல்லாததை அல்லது குறைவாக இருப்பதை நிரப்ப வேண்டிய நிலை.

  ‘வீட்டு வேலைக்கு ஒரு ஆள் தேவை’
  ‘அவனுக்குப் பணம் தேவை என்பது எனக்குத் தெரியும்’

 • 2

  கட்டாயம் வேண்டியது; தவிர்க்க இயலாமல் வேண்டியிருப்பது.

  ‘இந்தச் செலவு தேவைதானா என்று யோசித்துப்பார்’
  ‘மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை’

 • 3

  பொருளை அல்லது சேவையை மக்கள் வாங்க அல்லது பயன்படுத்த விரும்பும் நிலை.

  ‘விளம்பரங்கள்மூலம் தங்கள் பொருளுக்கான தேவையை உருவாக்க உற்பத்தியாளர்கள் முயல்கின்றனர்’