தமிழ் தோகை யின் அர்த்தம்

தோகை

பெயர்ச்சொல்

 • 1

  சில பறவைகளின் வால் பகுதியில் உள்ள நீண்ட இறகுகளின் தொகுதி.

  ‘தோகை விரித்தாடும் மயில்’
  ‘நீர்க்காக்கையின் தோகை சற்று நீண்டு கூர்மையாக இருக்கும்’

 • 2

  (கரும்பு, வாழை, நெல் ஆகியவற்றின்) நீண்ட இலை அல்லது தாள்களின் தொகுப்பு.

  ‘கரும்பு வெட்டியபின் தோகையை நிலத்திலேயே எரித்துவிடுவார்கள்’
  ‘நெற்பயிரின் பசும் தோகை காற்றில் மெல்ல அசைந்தாடியது’