தமிழ் தோண்டித் துருவு யின் அர்த்தம்

தோண்டித் துருவு

வினைச்சொல்துருவ, துருவி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றைப் பற்றி) மேலும்மேலும் நுணுக்கமான தகவல்களை அறிய முயற்சி செய்தல்.

    ‘படத்துக்குத்தான் போனேன் என்கிறான். அவனை எதற்குத் தோண்டித் துருவுகிறாய்?’
    ‘தோண்டித் துருவி அவனிடமிருந்து உண்மையை வரவழைத்துவிட்டேன்’