தமிழ் தோண்டு யின் அர்த்தம்

தோண்டு

வினைச்சொல்தோண்ட, தோண்டி

 • 1

  (கையால் அல்லது கருவியால்) மண்ணை (பள்ளம் ஏற்படும்படி) அகற்றுதல்.

  ‘இந்த இடத்தில் பத்தடி தோண்டினால் போதும், தண்ணீர் கிடைத்துவிடும்’
  ‘தென்னங்கன்றுகளை நடுவதற்காகக் குழிகள் தோண்டியிருந்தார்கள்’
  ‘பெருச்சாளி எப்படி மண்ணைத் தோண்டிப் போட்டிருக்கிறது பார்!’

 • 2

  (கிணறு, குளம் முதலியவற்றை) வெட்டி உண்டாக்குதல்.

  ‘அண்மையில் சில இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன’

 • 3

  (பழத்தில் கொட்டைபோல் புதைந்திருப்பதை) நெம்புதல்.

  ‘பனங்காயிலிருந்து நுங்கை விரலால் தோண்டி எடுத்தான்’