தமிழ் தோது யின் அர்த்தம்

தோது

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒன்றைச் செய்வதற்கு ஏற்ற) வசதி; சௌகரியம்.

  ‘மாம்பழம் நறுக்குவதற்குத் தோதாக ஒரு கத்தி வாங்கு’
  ‘அளப்பதற்குத் தோதாக நெல்லைக் குவித்துக்கொண்டிருந்தான்’
  ‘தனிமையில் பேசுவதற்குத் தோதான இடம்’

 • 2

  பேச்சு வழக்கு (ஒன்றுக்கொன்று) பொருத்தம்; இசைவு.

  ‘எல்லா விஷயங்களிலும் அவன் இவனுக்குத் தோது’
  ‘புடவையில் உள்ள சிறுசிறு சிவப்புப் பூக்களுக்குத் தோதாக ரவிக்கை அணிந்திருந்தாள்’