தமிழ் தோன்று யின் அர்த்தம்

தோன்று

வினைச்சொல்தோன்ற, தோன்றி

 • 1

  (பார்வைக்கு) தெரிதல்; காணப்படுதல்; காட்சிதருதல்.

  ‘கள்ள நோட்டும் நல்ல நோட்டுப் போலத்தான் தோன்றும்’
  ‘வானில் நிலவும் நட்சத்திரங்களும் தோன்றின’

 • 2

  (மனத்தில் எண்ணம், சிந்தனை போன்றவை) ஏற்படுதல்.

  ‘பிரச்சினையைத் தீர்க்காமல் தள்ளிப்போட்டது தவறு என்று தோன்றுகிறது’
  ‘மனத்தில் தோன்றியதைச் சட்டெனக் கூறிவிட்டேன்’
  ‘இவ்வாறு செய்தால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது’
  ‘இப்படி ஒரு எண்ணம் உனக்கு ஏன் தோன்றியது?’

 • 3

  உயர் வழக்கு பிறத்தல்; அவதரித்தல்/(நதி) உற்பத்தியாதல்.

  ‘அரச குலத்தில் தோன்றிய ஞானிகள்’
  ‘கோமுகி என்னும் இடத்தில் கங்கை நதி தோன்றுகிறது’

 • 4

  வெளிப்படுதல்; தெரியவருதல்.

  ‘சூரியன் தோன்றுவதும் மறைவதும் அன்றாட நிகழ்ச்சிதானே’
  ‘அவன் முகத்தில் தோன்றி மறைந்த வியப்பை நான் கவனிக்கத் தவறவில்லை’