தமிழ் தோப்புக்கரணம் யின் அர்த்தம்

தோப்புக்கரணம்

பெயர்ச்சொல்

  • 1

    இடது கைவிரலால் வலது காதையும் வலது கைவிரலால் இடது காதையும் பிடித்துக்கொண்டு முழங்கால் மடங்குமாறு உட்கார்ந்து எழுந்திருத்தல்.

    ‘பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போட்டு வணங்குவார்கள்’
    ‘நேரம் கழித்துப் பள்ளிக்கூடம் சென்றால் ஆசிரியர் பத்துத் தோப்புக்கரணம் போடச் சொல்வார்’