தோய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தோய்1தோய்2தோய்3

தோய்1

வினைச்சொல்தோய, தோய்ந்து, தோய்க்க, தோய்த்து

 • 1

  (துணி, ஆயுதம் முதலியவற்றில் நீர், இரத்தம் முதலியவை) படிதல்; நனைதல்.

  ‘வேடன் நஞ்சு தோய்ந்த அம்பை மானை நோக்கிச் செலுத்தினான்’
  உரு வழக்கு ‘இசையின் இனிமையில் அவருடைய மனம் தோய்ந்திருந்தது’

 • 2

  (கவலை, சோகம் முதலியவை) படர்தல்.

  ‘மருத்துவமனையில் மக்கள் கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தனர்’
  ‘தன் மனைவியின் முகத்தில் தோய்ந்திருந்த வருத்தத்தை அவன் கவனித்துவிட்டான்’

 • 3

  வட்டார வழக்கு (பால் தயிராக) உறைதல்.

  ‘தயிர் சரியாகத் தோயவில்லை’

தோய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தோய்1தோய்2தோய்3

தோய்2

வினைச்சொல்தோய, தோய்ந்து, தோய்க்க, தோய்த்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு தலையை நனைத்துக் குளித்தல்.

  ‘கண்ணுருட்டு மாறிய பின், தோய்ந்துவிட்டு அம்மன் கோயிலுக்குப் போக வேண்டும்’

தோய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தோய்1தோய்2தோய்3

தோய்3

வினைச்சொல்தோய, தோய்ந்து, தோய்க்க, தோய்த்து

 • 1

  (நீர், பால் முதலிய திரவங்களில் ஒரு திடப்பொருளை) முக்கி நனைத்தல்.

  ‘அந்தப் புடவையை நீரில் தோய்த்ததும் சாயம் போய்விட்டது’
  ‘மருந்தில் பஞ்சைத் தோய்த்து எடுத்தார்’
  ‘ரொட்டித் துண்டைப் பாலில் தோய்த்துச் சாப்பிடு’
  உரு வழக்கு ‘கசப்பான உண்மைகளையும் நகைச்சுவையில் தோய்த்துத் தருகிறீர்கள்’

 • 2

  (கடப்பாரை, கத்தி போன்றவற்றை) பழுக்கக் காய்ச்சி அடித்தல்.

  ‘இந்த இரும்பைத் தோய்த்துக் கடப்பாரை செய்து கொடு’