தமிழ் தோரணை யின் அர்த்தம்

தோரணை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒருவர் வகிக்கும் பதவி, மனத்தில் உள்ள எண்ணம் முதலியவற்றை வெளிப்படுத்தும்) பாவனை; மிடுக்கு.

  ‘உன் அதிகாரத் தோரணையை என்னிடமா காட்டுகிறாய்?’
  ‘தன் பதவிக்கு ஏற்றாற்போல் அவர் கம்பீரமான தோரணையில் இருந்தார்’

 • 2

  (ஒருவர் ஒரு செயலைச் செய்யும்) விதம்.

  ‘அவர் உட்கார்ந்திருக்கும் தோரணையே அவரிடம் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது’
  ‘நீ பேசும் தோரணை சரி இல்லை’
  ‘ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற தோரணையில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது’