தோல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தோல்1தோல்2

தோல்1

வினைச்சொல்தோற்க, தோற்று

 • 1

  (சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில்) வெற்றி வாய்ப்பை இழத்தல்.

  ‘இந்தச் சிறு படையிடமா நம் படை தோற்றது?’
  ‘கால்பந்தாட்டத்தில் தமிழ்நாடு கேரளத்திடம் தோற்றது’
  ‘எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டாலும் அவர் கட்சி தோற்றுப்போய்விடுகிறது’
  ‘அவர் தன் தொகுதியில் ஒரு முறைகூடத் தோற்றது கிடையாது’

 • 2

  முயற்சி செய்ததில் வெற்றி இல்லாமல் போதல்.

  ‘தேர்வில் தோற்றதற்காக அவனைக் கோபிக்காதே’
  ‘எந்த வியாபாரத்தைத் தொடங்கியும் அவர் தோற்றதில்லை’

தோல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தோல்1தோல்2

தோல்2

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதன், விலங்கு முதலியவற்றின்) தசையின் மேல் உறைபோல் மூடியிருப்பது.

  ‘நெருப்புப் பட்ட இடத்தில் தோல் கருகிவிட்டது’
  ‘தோல் நோய் மருத்துவர்’

 • 2

  (விலங்கு, பாம்பு போன்றவற்றிலிருந்து உரித்து எடுக்கப்பட்டு) பதப்படுத்தப்பட்ட (மேற்கூறிய) பொருள்.

  ‘வெளிநாட்டுக்குக் கடத்தப்படவிருந்த பாம்புத் தோல்கள் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டன’
  ‘தோல் பை’
  ‘தோல் செருப்பு’

 • 3

  (பழம், காய் ஆகியவற்றை மூடியுள்ள) உரித்தால் தனித்து வரும் புறப் பகுதி.

  ‘வாழைப்பழத் தோல்’
  ‘தோல் சீவிய உருளைக் கிழங்கு’
  ‘தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியைப் பயன்படுத்த வேண்டும்’