தமிழ் தோல்வி யின் அர்த்தம்

தோல்வி

பெயர்ச்சொல்

 • 1

  (சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் ) வெற்றி வாய்ப்பை இழந்துவிட்ட நிலை.

  ‘படைத்தளபதி தோல்வியை ஒப்புக்கொண்டு எதிரியிடம் சரணடைந்தார்’
  ‘அரையிறுதிப் போட்டியில் நம் அணி தோல்வியைத் தழுவியது ஏன்?’
  ‘இதை ஒரு தோல்வியாக எடுத்துக்கொள்ளாதீர்கள்’

 • 2

  (மேற்கொள்ளும் முயற்சி) பலிக்காத நிலை; நிறைவேறாத நிலை.

  ‘காதலில் தோல்வி’
  ‘தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் தீவிரமாக முயற்சிசெய்’
  ‘நன்றாகத் தேர்வு எழுதியிருக்கும்போது நீ ஏன் தோல்வியைப் பற்றி நினைக்க வேண்டும்?’