தமிழ் தோளோடு தோள் நில் யின் அர்த்தம்

தோளோடு தோள் நில்

வினைச்சொல்நிற்க, நின்று

  • 1

    (ஒருவருக்கொருவர்) பக்கபலமாக நிற்றல்; உறுதுணையாக இருத்தல்.

    ‘அண்ணனும் தம்பியும் தோளோடு தோள் நிற்க வேண்டிய நேரத்தில் இப்படிச் சண்டை போட்டுக்கொண்டால் எப்படி?’
    ‘பொதுப் பிரச்சினை என்று வந்துவிட்டால் இந்த ஊரில் உள்ள அனைவரும் தோளோடு தோள் நின்று செயல்படுவார்கள்’
    ‘பங்காளிச் சண்டையை மறந்துவிட்டுத் தோளோடு தோள் நின்று உறவினர் வீட்டுத் திருமணத்தை நடத்திவைத்தார்கள்’