தை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தை1தை2

தை1

வினைச்சொல்தைக்க, தைத்து

 • 1

  (துணி, தோல் போன்றவற்றில்) ஊசியை இரு புறமும் மாறிமாறிச் செலுத்தி நூலை இழுத்து, இரண்டு ஓரங்களை அல்லது பகுதிகளை இணைத்தல்/துணியில் பித்தான், ஊக்கு போன்றவற்றைப் பொருத்துதல்.

  ‘புதிதாக இரண்டு சட்டை தைக்க வேண்டும்’
  ‘இந்தச் செருப்பைத் தைக்க எவ்வளவு கூலி கேட்கிறாய்?’

 • 2

  (தைப்பதன்மூலம் உடை, மெத்தை, தலையணை போன்ற ஒன்றை) தயாரித்தல்; உண்டாக்குதல்.

  ‘தலையணை உறை தைக்கத் துணி வாங்க வேண்டும்’

 • 3

  (அம்பு, முள் போன்ற கூரிய நுனியை உடைய பொருள்கள்) ஒரு பரப்பில் குத்தி இறங்குதல்.

  ‘அம்பு தைத்த இடத்தில் மருந்து போட்டுக் கட்டினாள்’
  ‘காலில் முள் தைத்துவிட்டது’
  உரு வழக்கு ‘‘நீ படித்தவன்தானா?’ என்று அவர் கேட்ட கேள்வி நெஞ்சில் சுருக்கென்று தைத்தது’

 • 4

  இலைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து மெல்லிய ஈர்க்கு போன்றவற்றால் இணைத்து தையல் இலை தயாரித்தல்.

  ‘அவர் தேக்கு இலைகளைத் தைத்து அதில் சாப்பாடு போட்டார்’

 • 5

  (பை, மூட்டை போன்றவற்றின் வாய்ப்பகுதியைச் சணல், நூல் ஆகியவற்றால்) சேர்த்துப் பிணைத்தல்.

 • 6

  (அறுவைச் சிகிச்சையின்போது நரம்பு போன்றவற்றால்) இரண்டு பகுதிகளை இணைத்தல்; தையல் போடுதல்.

  ‘தோள்பட்டையில் வெட்டுப்பட்ட பகுதியை மருத்துவர் தைத்துக் கட்டுப்போட்டார்’

தை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தை1தை2

தை2

பெயர்ச்சொல்

 • 1

  பத்தாவது தமிழ் மாதத்தின் பெயர்.

  ‘தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது’