தையல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தையல்1தையல்2

தையல்1

பெயர்ச்சொல்

  • 1

    (துணி, தோல் போன்றவற்றில் இரு துண்டுகளை அல்லது கிழிசலை) இணைத்திருக்கும் நூல் இணைப்பு.

    ‘சட்டைத் தையல் பிரிந்திருக்கிறது’
    ‘பையில் தையல் சரியாக இல்லை’

  • 2

    துணியை ஆடையாகத் தைக்கும் தொழில்.

    ‘இப்போது தையல் படித்துக்கொண்டிருக்கிறேன்’

  • 3

    (அறுவைச் சிகிச்சையின்போது நரம்பு போன்றவற்றால்) இரண்டு பகுதிகளை சேர்த்துத் தைத்தல்.

    ‘காயம் ஏற்பட்ட இடத்தில் பத்துத் தையல்கள் போட்டார்கள்’
    ‘என் நெற்றியில் போட்ட தையலை நாளை பிரிக்கிறார்கள்’

தையல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தையல்1தையல்2

தையல்2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பெண்.