தொகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொகை1தொகை2

தொகை1

பெயர்ச்சொல்

 • 1

  குறிப்பிட்ட அளவில் இருக்கும் பணம்.

  ‘இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகக் கேட்டால் நான் எப்படித் தர முடியும்?’
  ‘லாபத் தொகை’

 • 2

  மொத்த எண்ணிக்கை அல்லது அளவு.

  ‘நமது கட்சியில் சேர்வோரின் தொகை நாளுக்கு நாள் வளர்ந்துவருவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்’
  ‘சுனாமியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் தொகை ஆயிரத்திற்கும் அதிகம்’
  ‘இலக்கியக் கூட்டத்தில் சிறு தொகையினரே கலந்துகொண்டனர்’

 • 3

  உயர் வழக்கு தொகுக்கப்பட்டது.

  ‘சங்க நூல்கள் பெரும்பாலும் தொகை நூல்களே’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு கணிசமான அளவு.

  ‘சந்தைக்குப் போனால் தொகையாக வெற்றிலை வாங்கிக்கொண்டு வா’
  ‘காணி பூராவும் குப்பை தொகையாகக் கிடக்கிறது’

தொகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொகை1தொகை2

தொகை2

பெயர்ச்சொல்

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  ஒரு பெயர்ச்சொல் மற்றொரு சொல்லோடு ஒட்டிநின்று ஒரு பெயர்த்தொடரை அமைத்து அவை கொண்டுள்ள தொடர்பைக் காட்டுவதற்கு உரிய உருபு, இடைச்சொல் முதலியவை இல்லாமல் இணைந்திருக்கும் கூட்டுநிலை.

  ‘‘தங்கத்தட்டு’ என்பது ஒரு தொகைச்சொல்’

 • 2

  இலக்கணம்
  சொல்லின் நேர் பொருளே அல்லாமல் அதனோடு தொடர்புடைய ஒரு அம்சத்தினால் மற்றொரு பொருளும் தொக்கிநிற்பது.