தமிழ் தொக்கிநில் யின் அர்த்தம்

தொக்கிநில்

வினைச்சொல்-நிற்க, -நின்று

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பேச்சில், எழுத்தில் அல்லது முகபாவனையில் கேள்வி, பொருள், உணர்வு போன்றவை) வெளிப்படையாகத் தெரியாமல் உணரக் கூடியதாக இருத்தல்.

    ‘‘யார் நீ?’ என்ற கேள்வி கதவைத் திறந்தவரின் முகத்தில் தொக்கிநின்றது’
    ‘‘எங்கு போயிருந்தாய்?’ என்ற அவருடைய கேள்வியில் சந்தேகம் தொக்கிநின்றது’