தொடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொடு1தொடு2

தொடு1

வினைச்சொல்தொட, தொட்டு, தொடுக்க, தொடுத்து

 • 1

  (ஒன்றின் மேல் ஒன்றைப் படச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (கையை) படச் செய்தல்; படச் செய்வதன் மூலம் உணர்தல்

   ‘பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்’
   ‘நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு ‘குழந்தைக்குக் காய்ச்சல் அடிக்கிறது’ என்றாள்’
   ‘வர்ணம் இன்னும் காயவில்லை, கதவைத் தொடாதே!’
   உரு வழக்கு ‘அந்தக் காட்சி மனத்தைத் தொட்டது’

  2. 1.2 ஒன்று மற்றொன்றின் மீது படுதல்; ஒன்றை ஒட்டி மற்றொன்று இருத்தல்

   ‘மின்சாரக் கம்பியை மரக்கிளை தொடுவதால் மின்தடை ஏற்படலாம்’
   ‘இரண்டு மேஜைகளையும் தொட்டாற்போல் போடு!’

 • 2

  (தொடுதலை உள்ளடக்கிய பிற செயல்களைக் குறிக்கும் வழக்கு)

  1. 2.1 (பெரும்பாலும் எச்ச வடிவங்களில் வரும்போது) அடித்தல்

   ‘நான் இருக்கும்போது யார் உன்னைத் தொட முடியும்?’
   ‘அவனைத் தொட்டால் கையை முறித்துவிடுவேன்’

  2. 2.2 (பெரும்பாலும் எச்ச வடிவங்களிலும் எதிர்மறையிலும் வரும்போது) உண்ணுதல்

  3. 2.3 (பெரும்பாலும் எச்ச வடிவங்களிலும் எதிர்மறையிலும்) பயன்படுத்துதல்

   ‘உன் சைக்கிளை நான் தொடுவதே இல்லை’
   ‘‘தூரிகையைத் தொட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன’ என்றார் ஓவியர்’
   உரு வழக்கு ‘உங்கள் கதையில் நீங்கள் சமூகப் பிரச்சினைகளைத் தொடுவதே இல்லை!’

  4. 2.4 (செயலை) மேற்கொள்ளுதல்

   ‘அவன் தொட்டதெல்லாம் துலங்கும்’
   ‘நீ தொட்ட காரியம் ஏதாவது உருப்பட்டிருக்கிறதா?’

 • 3

  (ஒன்றை அடைதல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 எட்டுதல்

   ‘இந்தியாவின் மக்கள்தொகை இன்னும் சில ஆண்டுகளில் நூற்றியிருபது கோடியைத் தொட்டுவிடும்!’
   ‘நாம் தொட முடியாத உயரத்துக்கு அவன் போய்விட்டான்’
   ‘விண்ணைத் தொடும் கட்டடங்கள்’

தொடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொடு1தொடு2

தொடு2

வினைச்சொல்தொட, தொட்டு, தொடுக்க, தொடுத்து

 • 1

  (சரம் அல்லது மாலை ஆக்குவதற்காகப் பூக்களை) தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வரும் வகையில் நாரில் அல்லது நூலில் முடிச்சிட்டு இணைத்தல்.

  ‘‘பூத் தொடுத்துத் தருகிறாயா?’ என்று அக்கா கேட்டாள்’

 • 2

  உயர் வழக்கு (அம்பு) எய்தல்.

 • 3

  (தாக்குதல்) நடத்துதல்.

  ‘பயணிகள் கப்பல்மீது தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதல் கண்டிக்கத் தக்கது’
  ‘எழுத்துச் சுதந்திரத்தை அரசு பறிப்பதாகப் பத்திரிகைகள் தாக்குதல் தொடுத்தன’

 • 4

  (வழக்கு) தாக்கல் செய்தல்.

  ‘பத்திரிகைமீது அவர் வழக்குத் தொடுத்துள்ளார்’

 • 5

  (தொடர்ந்து கேள்விகளை) கேட்டல்.

  ‘அமைச்சரை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகளைத் தொடுத்தனர்’
  ‘நேர்முகத்தில் சரமாரியாகத் தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடைகொடுக்க முடியாமல் தடுமாறினார்’