தமிழ் தொல்லை யின் அர்த்தம்

தொல்லை

பெயர்ச்சொல்

 • 1

  தொந்தரவு; உபத்திரவம்.

  ‘வீட்டில் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை’
  ‘வீட்டுக்காரரின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் வீட்டை மாற்றிவிட்டேன்’

 • 2

  பிறருக்கு எரிச்சலை அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும் செயல்.

  ‘பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டு தொல்லை விளைவித்த வாலிபர் கைது’

 • 3

  துன்பம்.

  ‘பணத் தொல்லைகள் தீருமா?’