தமிழ் தோட்டம் யின் அர்த்தம்

தோட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  மலர்ச் செடிகள் வளர்க்கப்படும் அல்லது (சிறிய அளவில்) காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்.

  ‘தோட்டத்தோடு கூடிய வீடு ஒன்று விலைக்கு வருகிறது’
  ‘எங்கள் வீட்டுக்குப் பின்னால் ஒரு பெரிய தோட்டம் உள்ளது’

 • 2

  (காய்கறிச் செடிகள், கரும்பு, வாழை முதலியவை) பெருமளவில் பயிரிடப்படும் இடம்.

  ‘காப்பித் தோட்டம்’
  ‘தேயிலைத் தோட்டம்’
  ‘வாழைத் தோட்டம்’

 • 3

  வட்டார வழக்கு வயல்.

  ‘காலையில் எழுந்து தோட்டத்துக்குப் போய்விட்டு வந்த பிறகுதான் அப்பா குளிப்பார்’