தமிழ் நக்கல் யின் அர்த்தம்

நக்கல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு குத்தல்; கிண்டல்; கேலி.

  ‘‘குறைகளைச் சொன்னால் அவற்றைத் தீர்த்துவிடவா போகிறீர்கள்’ என்று நக்கலாகக் கேட்டார்’
  ‘நக்கலான சிரிப்பு’
  ‘ஏன் சும்மா அவனையே எல்லோரும் நக்கல்செய்கிறீர்கள்?’

தமிழ் நீக்கல் யின் அர்த்தம்

நீக்கல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு இடைவெளி.

  ‘உன்னுடைய பற்களெல்லாம் ஏன் இவ்வளவு நீக்கலாக இருக்கிறது?’
  ‘ஜன்னல் நீக்கலுக்குள்ளாகக் காற்று வந்தது’
  ‘வேலி நீக்கலுக்குள்ளால் கோழி வந்துவிட்டது’