தமிழ் நகர் யின் அர்த்தம்

நகர்

வினைச்சொல்நகர, நகர்ந்து

 • 1

  மெதுவாக இடம் விட்டு இடம்பெயர்தல்; மெள்ளப் போதல்.

  ‘இருநூறு பேர் இழுத்தும் தேர் நகரவில்லை’
  ‘பேருந்து நகரத் தொடங்கியதும் தாவி ஏறிக்கொண்டான்’
  ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தென்மேற்குத் திசையை நோக்கி நகரக் கூடும்’
  ‘படகு மெதுவாக நகர ஆரம்பித்தது’

 • 2

  (இருக்கும் இடத்திலிருந்து) சற்று விலகுதல்; அகலுதல்; ஒதுங்குதல்.

  ‘கொஞ்சம் நகர்ந்து நில்’
  ‘முதியவர் வருவதைக் கண்டதும் அவள் நகர்ந்து வழி விட்டாள்’
  ‘சற்று நகர்ந்து உட்கார்’
  ‘மேஜையை விட்டு நகர்ந்து ஜன்னலின் அருகே போனான்’

 • 3

  (காலத்தைக் குறித்து வரும்போது) மெதுவாகக் கழிதல்.

  ‘எந்த வித மாற்றமும் இன்றி ஆண்டுகள் நகர்ந்தன’
  ‘நேரம் ஏன் இப்படி ஆமைபோல் நகர்கிறது என்று அவன் சலித்துக்கொண்டான்’
  ‘இந்தக் கிராமத்தில் வாழ்க்கை எளிமையாக நகர்ந்துகொண்டிருக்கிறது’

 • 4

  (கதை, நாவல், திரைப்படம் போன்றவை) ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்லுதல்.

  ‘இந்த நாவலின் இரண்டாவது பகுதி நகர மாட்டேன் என்கிறது’
  ‘இந்தத் திரைப்படத்தின் கதை சுவாரஸ்யமாக நகர்கிறது’

தமிழ் நகர் யின் அர்த்தம்

நகர்

பெயர்ச்சொல்

 • 1

  நகரம்.

  ‘நகரின் சில பகுதிகளில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது’
  ‘நடிகர் காலமான செய்தி நகர் முழுதும் விரைவாகப் பரவியது’
  ‘நெய்வேலி நகர் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது ஆகும்’

 • 2

  (ஒரு பெயருடன் இணைக்கப்படும்போது) குடியிருப்புப் பகுதி.

  ‘காந்தி நகர்’
  ‘திருவள்ளுவர் நகர்’
  ‘பாரதி நகர்’