தமிழ் நகர்த்து யின் அர்த்தம்

நகர்த்து

வினைச்சொல்நகர்த்த, நகர்த்தி

 • 1

  (தள்ளுவதன்மூலம் ஒன்றை) இடம்பெயரச் செய்தல்.

  ‘மேஜையைக் கொஞ்சம் நகர்த்திப் போட்டுக்கொள்’
  ‘நகர்த்தக் கூட முடியாத அளவுக்குக் கனமான கட்டில்’

 • 2

  (உடல் உறுப்புகளை, இயந்திரம் போன்றவற்றின் பாகங்களை) ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குக் கொண்டுசெல்லுதல்.

  ‘இந்த உடற்பயிற்சியில் ஒரு காலை மட்டும் முன் பக்கம் நகர்த்தி பின்பு குனிய வேண்டும்’

 • 3

  (கதை, நாவல், திரைப்படம் போன்றவற்றில்) கதையை, கருத்தை முன்னே எடுத்துச்செல்லுதல்.

  ‘ஒரு எழுத்தாளருக்குக் கதையை எப்படி நகர்த்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்’
  ‘இந்தத் திரைப்படத்தில் கதையை நகர்த்த இயக்குநர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்’

 • 4

  (சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில்) (காயை) இடம் மாற்றுதல்.

  ‘நீ குதிரையை நகர்த்தினால் அவன் உன் ராணியை வெட்டிவிடுவான்’