நகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நகை1நகை2நகை3

நகை1

வினைச்சொல்நகைக்க, நகைத்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு சிரித்தல்.

  ‘அவன் சொன்னதைக் கேட்டு அருகிலிருந்த பயணிகள் கொல்லென்று நகைத்தனர்’
  ‘உலகம் நம்மைப் பார்த்து நகைக்கக் கூடாது’
  ‘மன்னனைப் பார்த்துப் பதுமை நகைத்தது’

நகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நகை1நகை2நகை3

நகை2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு சிரிப்பு.

நகை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நகை1நகை2நகை3

நகை3

பெயர்ச்சொல்

 • 1

  தங்கம், வெள்ளி முதலியவற்றால் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு அழகுக்காக அணிந்துகொள்ளும் சங்கிலி, வளையல் போன்ற அணிகலன்.

  ‘அம்மாவின் நகையை அடகு வைத்துதான் பரீட்சைக்குப் பணம் கட்டினேன்’
  ‘நடுத்தர வர்க்க ஆண்களும் இப்போது நகைகள் அணியத் தொடங்கிவிட்டார்கள்’
  ‘நகைக் கடை’