தமிழ் நகைச்சுவை யின் அர்த்தம்

நகைச்சுவை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சிரித்து மகிழச் செய்யும் தன்மை.

  ‘அவருடைய பேச்சிலும் எழுத்திலும் நகைச்சுவை மிளிரும்’
  ‘நகைச்சுவைத் துணுக்கு’
  ‘நகைச்சுவை நாடகம்’
  ‘தன் நகைச்சுவை நடிப்பால் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்’

 • 2

  சிரிப்பு ஏற்படுத்தும் முறையில் சொல்லப்படுவது.

  ‘தன் நகைச்சுவையைத் தானே அனுபவிப்பதுபோல் பெரிதாகச் சிரித்தார்’
  ‘அவருடைய நகைச்சுவை ரசிக்கக்கூடியதாக இருந்தது’