தமிழ் நீங்கலாக யின் அர்த்தம்

நீங்கலாக

இடைச்சொல்

  • 1

    ‘(மற்றவற்றோடு குறிப்பிடப்படுவது) தவிர்த்து’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘தவிர’.

    ‘பிடிபட்டவர்களில் ஒருவர் நீங்கலாக மற்றவர்களைக் காவலர் உடனே விடுவித்துவிட்டனர்’
    ‘ஆளும் கட்சி நீங்கலாக மற்ற கட்சிகள் அனைத்தும் போராட்டத்தில் கலந்துகொள்கின்றன’
    ‘காஷ்மீர் நீங்கலாக இந்தியா முழுமைக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்’