தமிழ் நசநசவென்று யின் அர்த்தம்

நசநசவென்று

வினையடை

 • 1

  ஈரத்தின் காரணமாக தரை (நடப்பதற்கு) அசௌகரியமாக.

  ‘மழை பெய்து தரை நசநசவென்று இருக்கிறது’
  ‘கொத்தனார் வேலை முடிகிறவரை வீடு நசநசவென்றுதான் இருக்கும்’

 • 2

  (வியர்வையின் காரணமாக உடல்) கசகச வென்று.

  ‘இறுக்கமான சட்டை போட்டிருப்பதால் உடம்பு வேர்த்து நசநசவென்று ஆகிவிட்டது.’