நசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நசி1நசி2

நசி1

வினைச்சொல்நசிய, நசிந்து, நசிக்க, நசித்து

 • 1

  (ஓர் இனம்) எண்ணிக்கையில் குறைந்து அழியும் நிலைக்கு வருதல்/(குடும்பம், கலை முதலியவை) செல்வாக்கையும் மதிப்பையும் இழந்து நலிவடைதல்.

  ‘எண்ணெய்க்காகப் பெருமளவில் கொல்லப்படுவதால் சில திமிங்கில இனங்கள் நசிந்துவருகின்றன’
  ‘கண்ணெதிரில் நண்பரின் குடும்பம் நசிந்துகொண்டிருப்பதைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது’
  ‘நசிந்து வரும் கலைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு நசுங்குதல்.

  ‘சுவர் இடிந்து விழுந்ததில் நசிந்து இறந்துவிட்டார்’
  ‘சுவரில் மோதி காரின் முன்பக்கம் நசிந்துவிட்டது’
  ‘நெரிசலில் பையில் இருந்த வாழைப்பழம் நசிந்துவிட்டது’

நசி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நசி1நசி2

நசி2

வினைச்சொல்நசிய, நசிந்து, நசிக்க, நசித்து

 • 1

  குறைதல்; நசிதல்.

  ‘இருவாட்சிப் பறவையினம் நசித்துவருகிறது’
  ‘இந்தக் கலைஞர்கள் இல்லாவிட்டால் இந்தக் கலை என்றோ நசித்திருக்கும்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு நசுக்குதல்.

  ‘தேசிக்காயை வண்டிச் சக்கரத்தின் கீழ் வைத்து நசித்துவிடு’
  ‘சின்னப் பிள்ளையின் கையை நசித்துவிடாதே’