தமிழ் நசுக்கு யின் அர்த்தம்

நசுக்கு

வினைச்சொல்நசுக்க, நசுக்கி

 • 1

  (ஒன்றை ஒரு பரப்பில்) அழுத்தி அதன் உருவம் சிதையும் வகையில் தேய்த்தல்.

  ‘பீடித் துண்டைக் கீழே போட்டுக் காலால் நசுக்கினான்’
  ‘மூட்டைப் பூச்சியை நசுக்காதே’
  ‘பழத்தை நசுக்கிவிடாதே’

 • 2

  (ஒன்றை) இரு பக்கங்களிலிருந்தும் விசையுடன் அழுத்துதல் அல்லது நெருக்குதல்.

  ‘கதவைச் சாத்தும்போது என் விரலை நசுக்கிவிட்டான்’
  ‘ஏன் இப்படி என்னை நசுக்குகிறீர்கள்? கொஞ்சம் தள்ளி நிற்கக் கூடாதா?’

 • 3

  (போராட்டம், உரிமை முதலியவற்றை) ஒடுக்குதல்.

  ‘தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை நசுக்க நிர்வாகம் வன்முறையைக் கையாண்டது’
  ‘சர்வாதிகார அரசுகள் மக்களின் சுதந்திரத்தை நசுக்கும்’
  ‘பேச்சுரிமையை நசுக்கும் போக்கு கவலை அளிக்கிறது’