தமிழ் நசுங்கு யின் அர்த்தம்

நசுங்கு

வினைச்சொல்நசுங்க, நசுங்கி

  • 1

    (ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால்) உருக்குலைதல்; சிதைதல்.

    ‘ஓடும் பேருந்திலிருந்து விழுந்தவர் சக்கரத்தில் சிக்கி நசுங்கிச் செத்தார்’
    ‘கீழே விழுந்து ஆப்பிள் ஒரு பக்கத்தில் நசுங்கிவிட்டது’
    ‘விரல் நசுங்கிவிடப்போகிறது. கதவைப் பார்த்துச் சாத்து’