தமிழ் நட்சத்திரம் யின் அர்த்தம்

நட்சத்திரம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒளியையும் வெப்பத்தையும் தன்னிடத்திலேயே கொண்ட, கிரகங்களைவிடப் பல மடங்கு பெரியதாகவும் பூமியிலிருந்து வெகு தொலைவிலும் இருக்கும், (இரவில் மின்னும்) விண்வெளிப் பொருள்.

  ‘சூரியனும் ஒரு நட்சத்திரம்தான்’

 • 2

  ஐந்து முனைகளைக் கொண்ட வடிவம்.

  ‘அந்தக் குளத்தை நட்சத்திர வடிவத்தில் அமைத்திருந்தார்கள்’

 • 3

  (சில துறைகளில்) பலரும் தெரிந்திருக்கிற வகையில் புகழ் பெற்றுத் திகழ்கிற நபர்.

  ‘விழாவில் பல திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்’
  ‘இந்தப் போட்டியில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் பங்குபெறுவார்கள்’

 • 4

  சோதிடம்
  (ஒருவரின் ஜாதகத்தைக் கணிக்க அடிப்படையாகக் கொள்ளும்) பூமியைச் சந்திரன் ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலத்தின் இருபத்தேழு பிரிவுகளில் ஒன்று.

  ‘குழந்தை திருவோண நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறது’
  ‘உன் நட்சத்திரம் என்ன?’

 • 5

  சோதிடம்
  விண்வெளி மண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட நட்சத்திரங்களின் தொகுப்பு.

  ‘அஸ்வினி என்ற நட்சத்திரம் குதிரை வடிவம் போல் தோற்றமளிக்கும் பல நட்சத்திரங்களைக் கொண்டது’