தமிழ் நீட்டிப்பு யின் அர்த்தம்

நீட்டிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பதவி, பணி முதலியவை) வரையறுக்கப்பட்ட காலம் முடிந்த பிறகும் தொடரும் கால அதிகரிப்பு; நீடிப்பு.

    ‘இயக்குநருக்குப் பதவி நீட்டிப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது’
    ‘போர்நிறுத்த நீட்டிப்புக் குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன’