தமிழ் நீட்டிமுழக்கு யின் அர்த்தம்

நீட்டிமுழக்கு

வினைச்சொல்-முழக்க, -முழக்கி

  • 1

    (சுருக்கமாகக் கூறாமல் கேட்பவருக்கு எரிச்சல் தரும் விதத்தில்) தேவையில்லாமல் விரித்துக் கூறுதல்; வளர்த்தல்.

    ‘‘நீட்டிமுழக்காமல் விஷயத்துக்கு வா’ என்று அப்பா அதட்டினார்’
    ‘மேடையில் ஒருவர் மாணவர்களின் கடமைகளைப் பற்றி நீட்டிமுழக்கிப் பேசிக்கொண்டிருந்தார்’