தமிழ் நடத்து யின் அர்த்தம்

நடத்து

வினைச்சொல்நடத்த, நடத்தி

 • 1

  (நடைபெறச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஒன்றைக் குறிப்பிட்ட முறைப்படி) நிகழ்த்துதல்

   ‘நிர்வாகத்தை எதிர்த்துத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்’
   ‘அரிசித் தட்டுப்பாடுகுறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்’
   ‘வருகிற மே மாதம் தமிழகத்திலும் ஆந்திர மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல்களை நடத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது’
   ‘தேசியத் தடகளப் போட்டிகளைத் தமிழகம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது’
   ‘கோழி வளர்ப்புப்பற்றிக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது’
   ‘எங்கள் கணித ஆசிரியரைப் போல் பாடம் நடத்த யாராலும் முடியாது’

  2. 1.2 (நிர்வாகம் முதலியவற்றை) செயல்படச் செய்தல்; இயக்குதல்

   ‘இந்தச் சொற்ப வருமானத்தில் எப்படிக் குடும்பம் நடத்த முடியும்?’
   ‘அவர் பத்தாண்டுகளாக ஒரு பத்திரிகை நடத்துகிறார்’

  3. 1.3 (நாடகம், கூட்டம் முதலியவற்றை) நடைபெறச் செய்தல்

   ‘இந்த அரங்கில் நாடகம் நடத்தப் போதிய இடம் இல்லை’

  4. 1.4 குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட தன்மையில் ஒருவரிடம் பேசுதல் அல்லது பழகுதல்

   ‘நீ அவரை நடத்திய விதம் சரி இல்லை’

  5. 1.5 (தாக்குதல்) செலுத்துதல்; தொடுத்தல்

   ‘தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்’
   ‘போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சால் நகரமே அழிந்துவிட்டது’

 • 2

  (இடம்பெயரச் செய்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (பெரும்பாலும் எச்ச வடிவங்களில் வரும்போது) (ஒருவரை) நடக்கச் செய்தல்

   ‘தாத்தாவை நடத்தியா கூட்டி வந்தாய்?’
   உரு வழக்கு ‘கர்த்தர் உங்களை மகிழ்ச்சியான பாதையில் நடத்துவார்’