தமிழ் நடந்தேறு யின் அர்த்தம்

நடந்தேறு

வினைச்சொல்-ஏற, -ஏறி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (நிகழ்ச்சி) நடந்து முடிதல்; நிறைவேறுதல்.

    ‘நூற்றாண்டு விழா இனிதே நடந்தேறியது’
    ‘தங்கள் மகனின் திருமணம் சிறப்பாக நடந்தேறியது அறிந்து மகிழ்ச்சி’
    ‘திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடந்தேறியது’