தமிழ் நடனம் யின் அர்த்தம்

நடனம்

பெயர்ச்சொல்

 • 1

  இசைக்கு ஏற்றவாறு உடலையும் உறுப்புகளையும் அசைத்து, முகத்தில் தகுந்த பாவங்களை வெளிப்படுத்தி நிகழ்த்தும் கலை.

  ‘குழு நடனம்’
  ‘பாரம்பரிய நடனம்’
  ‘நடன இயக்குநர்’
  ‘கரகாட்டம் ஏனைய கிராமிய நடனங்களிலிருந்து வேறுபடுகிறது’
  ‘படப்பிடிப்புக்கு முதல் நாள் நடன ஒத்திகை நடைபெற்றது’

 • 2

  (பூச்சி, பறவை, விலங்கு போன்றவை) ஏதேனும் ஒரு செய்தியைத் தன் இனத்தைச் சேர்ந்த பிறவற்றுக்குத் தெரிவிப்பதற்காக ஆடுவது போன்ற அசைவுகளை மேற்கொள்ளும் செயல்.

  ‘ஒரு தேனீ ஆடும் நடனத்திலிருந்து மலர்கள் உள்ள இடத்தை மற்ற தேனீக்கள் அறிந்துகொள்கின்றன’
  ‘மயில் தோகை விரித்து ஆடிய நடனம் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது’