தமிழ் நடப்பு யின் அர்த்தம்

நடப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிட்ட சூழ்நிலையில்) நிகழ்வது.

  ‘குடும்ப நடப்பு தெரியாமல் பேசாதே’
  ‘கட்சி நடப்பு சரியாக இல்லை’
  ‘உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ளப் பத்திரிகை படி’
  ‘நாட்டு நடப்பைப் பற்றிய அக்கறை இல்லாமல் இருக்கிறாயே!’
  ‘சமீப காலமாக இலக்கிய இதழ்கள் நாட்டு நடப்புகளில் கவனம் செலுத்துகின்றன’

 • 2

  (எண்ணத்தின்) செயல் வடிவம்; செயல்.

  ‘நினைப்பிற்கும் நடப்பிற்கும் தொடர்பே இல்லை’

தமிழ் நடப்பு யின் அர்த்தம்

நடப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (திடீர் வசதியினால் ஏற்படும்) கர்வம்.

  ‘காசு கையில் ஏறிவிட்டதால் அவன் எல்லோரிடமும் நடப்பு காட்டிக்கொண்டிருக்கிறான்’

தமிழ் நடப்பு யின் அர்த்தம்

நடப்பு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு கருமாதிக்கு முந்தைய நாள் இரவில் நடக்கும் சடங்கு.

தமிழ் நடப்பு யின் அர்த்தம்

நடப்பு

பெயரடை

 • 1

  நிகழ்ந்துகொண்டிருக்கிற; தற்போதைய.

  ‘நடப்பு ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்’
  ‘நடப்புப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட புதுவகை நெல் அமோக விளைச்சலைத் தந்துள்ளது’