தமிழ் நட்பு யின் அர்த்தம்

நட்பு

பெயர்ச்சொல்

 • 1

  அன்பு, ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் (பொதுவாக) உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.

  ‘பள்ளிக்கூட நாட்களிலிருந்தே எங்களுக்குள் நெருங்கிய நட்பு உண்டு’
  ‘எங்களுக்கு இடையே உள்ள நட்பைச் சிலர் காதல் என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்’

 • 2

  (ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் கொண்டிருக்கும்) சுமுகமான தொடர்பு.

  ‘நட்பு நாடுகள்’
  ‘இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்பு’