தமிழ் நடமாட்டம் யின் அர்த்தம்

நடமாட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (மக்கள், விலங்கு, வாகனம் முதலியவற்றைக் குறித்து வரும்போது) (ஓர் இடத்தில்) செல்லுதல், வருதல் போன்ற செயல்பாடு அல்லது இயக்கம்.

  ‘ஜன நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் வீடு கட்டியிருக்கிறாய்’
  ‘மலையடிவாரத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது’

 • 2

  (எழுந்து) நடக்க இயலும் நிலை.

  ‘அவருக்குக் கண் மங்கி நடமாட்டம் குறைந்துவிட்டது’