தமிழ் நடி யின் அர்த்தம்

நடி

வினைச்சொல்நடிக்க, நடித்து

 • 1

  (திரைப்படம், நாடகம், தொலைக்காட்சி ஆகியவற்றில்) ஒரு பாத்திரமாக வேடம் ஏற்று அந்தப் பாத்திரத்தின் குண இயல்புகளை, உணர்வுகளை வெளிப்படுத்துதல்.

  ‘பள்ளி ஆண்டு விழா நாடகத்தில் என் தம்பி பாரதியாராக நடித்தான்’
  ‘பிரபல நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த படம்’

 • 2

  (வேண்டுமென்றே) குறிப்பிட்ட விதத்தில் பாவனைசெய்தல் அல்லது பிறரை ஏமாற்ற மற்றொருவரைப் போல நடந்துகொள்ளுதல்.

  ‘தகராறு நடந்த இடத்தில் நீ இருந்தாய். ஆனால் உனக்கு ஒன்றுமே தெரியாதது போல நடிக்கிறாயே!’
  ‘வருமானவரி அதிகாரி போல நடித்துப் பணம் வசூலித்த நபர் கைது’

தமிழ் நீடி யின் அர்த்தம்

நீடி

வினைச்சொல்நீடிக்க, நீடித்து

 • 1

  (கால அளவில்) தொடர்தல்.

  ‘பேச்சு மேலும் அரைமணி நேரம் நீடித்தது’
  ‘இரு நாடுகளின் நீடித்த நட்பின் அடையாளம் இந்த ஒப்பந்தம்’
  ‘இது நீடித்து உழைக்கக்கூடிய மரம்’
  ‘அவருடைய சந்தோஷம் சில நொடிகளே நீடித்தது’
  ‘அபராதம் கட்டும்வரையில் சிறைத் தண்டனை நீடிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்’
  ‘மாணவர்களின் போராட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை’
  ‘இதே நிலை நீடித்தால் வெகு விரைவில் காடுகள் அழிந்து இந்தப் பகுதி பாலைவனம் ஆகிவிடும் வாய்ப்பு உள்ளது’
  ‘நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் ஆறு மாத காலம்வரை நீடிக்கலாம் என்று புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்’