தமிழ் நடிப்பு யின் அர்த்தம்

நடிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  திரைப்படம், நாடகம் முதலியவற்றில் பாத்திரம் ஏற்று நடிக்கும் செயல்.

  ‘அந்த நகைச்சுவை நடிகரின் நடிப்பு தரக்குறைவாக இருந்தது’
  ‘கதாநாயகனின் குணச்சித்திர நடிப்புதான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம்’

 • 2

  (உண்மை என்று நம்பும்படியான) பொய்ச் செயல்; பாவனை.

  ‘அவனுடைய நடிப்பில் மயங்கிவிடாதே’
  ‘எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு ஒன்றும் தெரியாததைப் போன்ற நடிப்பு!’

தமிழ் நீடிப்பு யின் அர்த்தம்

நீடிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  பதவி, வேலை போன்றவற்றில் ஒருவர் உரிய காலம் முடிந்த பின்பு தொடர்ந்து இருப்பதற்கு ஏற்ற வகையில் அளிக்கப்படும் கால அதிகரிப்பு.

  ‘பதவி நீடிப்பு வேண்டி மேலிடத்திற்கு விண்ணப்பித்துள்ளேன்’