நடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நடு1நடு2

நீடு1

வினையடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு நீடூழி.

  ‘நீங்கள் நீடு வாழ வாழ்த்துகிறேன்!’

நடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நடு1நடு2

நடு2

வினைச்சொல்நட, நட்டு

 • 1

  (நாற்று, கன்று, செடி போன்றவற்றை நிலத்தில்) ஊன்றுதல்.

  ‘தோட்டத்தில் புதிதாக ஒரு வாழைக்கன்று நட்டிருக்கிறான்’

 • 2

  (தூண், கம்பம், கழி போன்றவற்றின் ஒரு முனையைக் குழியில்) பதித்து நிற்கச் செய்தல்.

  ‘தந்திக் கம்பங்களை நடுவதற்காகக் குழி தோண்டிப்போட்டிருக்கிறார்கள்’
  ‘பள்ளி மைதானத்தின் ஒரு ஓரத்தில் உயரமான கொடிக்கம்பம் நட்டிருந்தார்கள்’

நடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நடு1நடு2

நடு

பெயர்ச்சொல்

 • 1

  இடத்தில் அல்லது காலத்தில் இடைப்பட்ட பகுதி அல்லது நிலை.

  ‘அலமாரியின் நடுத் தட்டில் இந்தச் சாவியை வை’
  ‘புத்தக வரிசையின் நடுவிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார்’
  ‘நடுக் கூடத்தில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது’
  ‘நடு வயது’
  ‘நடு இரவில் கதவைத் தட்டுவது யார்?’
  ‘நடுப் பகல் வெயில் மண்டையைப் பிளக்கிறது’

 • 2

  (ஒரு பரப்பின்) எந்த எல்லைக்கும் அருகில் இல்லாத நிலை/எல்லைகளிலிருந்து சமதூரத்தில் இருக்கும் நிலை.

  ‘புயலில் சிக்கிய கப்பல் நடுக் கடலில் தத்தளித்தது’
  ‘நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியது’
  ‘தேர் நடு வீதியில் நின்று கொண்டிருந்தது’
  ‘அவன் நடுக் காட்டில் மாட்டிக் கொண்டு தவித்தான்’

 • 3

  (உறவுப் பெயரால் குறிக்கப்படுபவர்கள்) மூன்று பேராக இருக்கும்போது இரண்டாவதாக இருப்பவர்.

  ‘நடு அண்ணன்’
  ‘நடு சித்தப்பா’
  ‘நடு மாமா’