தமிழ் நடுக்கம் யின் அர்த்தம்
நடுக்கம்
பெயர்ச்சொல்
- 1
(உடலில் அல்லது உடலின் ஒரு பகுதியில் ஏற்படும்) கட்டுப்பாடற்ற அசைவு.
‘குளிர் ஊசியாகக் குத்துகிறது; கைகால்களில் நடுக்கம்’‘வயதாகிவிட்டதால் கையில் நடுக்கம்; கையெழுத்துக்கூடப் போட முடியவில்லை’ - 2
(குரலின்) இயல்பைக் கெடுக்கும் அதிர்வு.
‘அவன் குரலில் நடுக்கம் இருந்தது’‘பயமும் நடுக்கமும் கலந்த குரலில் அவள் பேசினாள்’ - 3
(ஒன்றால் அல்லது ஒருவரால் ஏற்படும்) பயம்.
‘விபத்துக்குப் பிறகு அவருக்குப் பேருந்தைக் கண்டாலே ஒரு நடுக்கம் ஏற்படும்’‘மேடையில் ஏறிப் பேசுவது என்றால் எனக்கு நடுக்கம்’