தமிழ் நடுங்கு யின் அர்த்தம்

நடுங்கு

வினைச்சொல்நடுங்க, நடுங்கி

 • 1

  (உடல் அல்லது உடலின் பகுதி) கட்டுப்பாடு இல்லாமல் அசைதல்.

  ‘குளிர் தாங்காமல் நடுங்கினான்’
  ‘அப்பா அடிப்பாரோ என்ற பயத்தில் அவனுக்குக் கைகால்கள் நடுங்கின’
  ‘ஒரு கையெழுத்துப் போடுவதற்குள் ஏன் இப்படி உன் கை நடுங்குகிறது?’

 • 2

  (ஒன்றிடம் அல்லது ஒருவரிடம்) பயம்கொள்ளுதல்.

  ‘உன் அண்ணனைப் பார்த்து ஏன் இப்படி நடுங்குகிறாய்?’
  ‘பாம்பு என்றாலே அவன் நடுங்குவான்’

 • 3

  (பூமி) கண்ணுக்குத் தெரியாத வகையில் ஆனால் உணரக் கூடிய விதத்தில் குலுங்குதல்; அதிர்தல்.

  ‘நிலநடுக்கத்தின்போது நிலம் பலமாக நடுங்கியதை உணர முடிந்தது’

 • 4

  (பயம், மனக்கலக்கம் முதலியவற்றால் குரல்) இயல்பாக இல்லாமல் ஒரு விதமான அதிர்வுடன் வெளிப்படுதல்.

  ‘விபத்தைப் பற்றிச் சொல்லும்போதே அவன் குரல் நடுங்கியது’