தமிழ் நடுத்தரம் யின் அர்த்தம்

நடுத்தரம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (தரம், தன்மை, அளவு முதலியவை குறித்து வரும்போது) அதிகம் என்றோ குறைவு என்றோ அல்லது நல்லது என்றோ மோசம் என்றோ அல்லது சிறியது என்றோ பெரியது என்றோ கருதப்படும் எதிர் நிலைகளுக்கு இடைப்பட்டதாக அமைவது.

  ‘நடுத்தரமான அரிசிக்கே இந்த விலையா?’
  ‘பழம் நடுத்தரமாக இருந்தால் போதும்’
  ‘பெண் நடுத்தர உயரம்தான்’
  ‘நடுத்தர வகுப்பு’
  ‘சமையல் வாயுவின் விலை உயர்வு நடுத்தர மக்களைப் பாதிக்கும்’
  ‘நடுத்தர ரக ஏவுகணைகளை இந்தியா சோதனை செய்தது’